சென்னை: தமிழகத்தில் பிறந்திருக்க வேண்டும் என்ற கனவு இப்போது நினைவாகி உள்ளது என வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கூறினார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மெட்ரோஸ் உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்ட  முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய தலைமைநீதிபதி, நேற்றுதான் தமிழ் கற்க தொடங்கினேன், அடுத்து வரும் நாட்களில் தமிழை கற்று தமிழில் பேச முயற்சிப்பேன்.

இந்தியாவின் மிகப்பெரியதான அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினேன். தற்போது மெட்ராஸ் உயர்நீதிமன்றதிற்கு பணியாற்ற வந்துள்ளேன். எவ்வித அச்சமுமின்றி, பாரபட்சமின்றி நேர்மையாக செயல்பட உறுதி அளிக்கிறேன். பணியில் பயமோ, பரபட்சமோ இருக்காது. இங்கு நிறைய பேச விரும்பவில்லை. ஆனால் செயலில் காட்டுவேன்.

தற்போது,  வணக்கம், நன்றி போன்ற வார்த்தையாகளை  கற்றுள்ளேன். தினமும் சில வார்த்தைகளை கற்றுக் கொடுங்கள். தமிழகத்தில் பிறந்திருக்க வேண்டுமென கனவு கண்டேன். இப்போது உயர் நீதிமன்றத்தில் பதவியேற்றதன் மூலம் கனவு நினைவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.