நெட்டிசன்
Venkat Ramanujam முகநூல் பதிவு
அஸ்வினி உள்ளிட்ட 282 பேருக்கு கைகளில் பட்டா தந்த கைகளில் ஈரம் காயும் முன் .. கடந்த மூன்று நாட்களாக ..
கொட்டும் மழையில் பல்வேறு இடத்தில் சாக்கடை முகப்பில் நின்று சரி பார்த்து கொண்டு..
தெருவில் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் உணவின் ருசியினை சரி பார்த்து கொண்டு..
ஏரிகளுக்கு வரும் நீரின் அளவினை மற்றும் அலுவல் மேலாண்மை காரணமாக சென்னை எங்கும் விஜயம் செய்து கொண்டு ..
மழையில் கல்யாணம் ஜோடிகளுக்கு வாழ்த்துனை சொல்லி கொண்டு..
மழலைகளுக்கு வழியில் பெயர் வைத்து கொண்டு ..
எதிர்கட்சிகள் சொல்வது போல ஸ்டண்ட் என்றால் ஒரு நாளில் முடிந்து இருக்க வேண்டுமே.. மூன்று நாடகள் எதற்கு ..
திட்டமிடல் இல்லாமல் இருப்பின் ..
இவ்வளவு துல்லியமாக present காலத்தினை பற்றி “ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதத்துக்குள்ளாகத் திட்டமிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதியாகக் குறைத்துள்ளோம் “என்றும் ..
திட்டமிடல் இல்லாமல் இருப்பின் ..
விரைவில் சென்னையை முழுமையாகச் சீரமைப்போம் என்றும் மேலும் பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டின் நேரடி விளைவுகளை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து விசாரணை நடத்தப்படும் என future காலத்தினை பற்றியும் உறுதியுடன் கூற முடியுமா ..
விளையாட்டாக மனைவிடம் சொன்னேன் மனுஷன் வீட்டுக்கு போகவே மாட்டாரா அல்லது போக பிடிக்காதா என்று …
அரசியல் அதிகம் பேசாத மனைவி நிதானமாக சொன்ன பதிலால் தொலைந்தது ஈகோ. .
“இப்படி தான் நிர்வாகம் இருக்க வேண்டும் என கடந்த பத்தாண்டாக அவர் யோசித்து இருப்பார் என்று”..
3 நாட்களாக தான் களத்தில் இறங்கி மொத்த அரசு இயந்திரத்தை தன் கட்சியினரை மட்டுமல்லாமல் எதிர்கட்சியினரையும் களத்துக்கு வர வைத்தவரை..
ஈகோவை மனைவியின் வார்த்தைகளால் தோற்கடிக்கப் பட்டவனாக..
Fully planned work is half done என எனக்கு கற்றுக்கொடுத்த மேலாண்மை கல்வியின் சார்பாக சொல்கிறேன்..
கொண்டாட பட வேண்டியவர் தான் M. K. Stalin ..
பத்தாண்டுகளாக #அதிமுக அரசு #பாஜக வுடன் சேர்ந்து ஊழல் செய்த சீரழித்த சென்னை கட்டமைப்பை மீட்க பாடுபட்டு ..
சளைக்காமல் ஊழியம் பார்க்கும் முத்துவேல் பேரனே ..
குல கொழுந்தே..
நீ வாழியவே ..
நிரந்திர சென்னை மக்கள் என்றில்லை சென்னைவாசியாக குடியேறிய நாங்களும் இனி குடும்பமாக அவரை அப்படி தான் கொண்டாடுவோம் ..