ராமநாதபுரம்:

சும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினர்.

அவர்களுடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக போற்றி வாழ்ந்தவர் முத்துராமலிங்கத் தேவர். அவரின் 112-வது ஜெயந்தி விழா  மற்றும் 57-வது குருபூஜை விழா இன்று அவரது நினைவிடமான பசும்பொன்னில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, சமூகத்தினரும் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பசும்பொன்னுக்கு வருவதால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்று நடைபெறுகிறது.

அதிமுக சார்பில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பா ளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோர், தேவர் நினைவிடத்தில்  கால சுமார் 9.30 மணி அளவில் மாலைகளை வைத்து  மரியாதை செலுத்தினர். அங்கு சுமார் கால்மணி நேரம் இருந்தவர்கள், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அதைத்தொடர்ந்து மற்ற கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மரியாதை

முன்னதாக,  மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதுபோல சென்னை நந்தனத்தில் உள்ள  முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், நிலோபர் கபில், வளர்மதி, செங்கோட்டையன், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.