சென்னை
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ரூபாய் கூட தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறவில்லை என அக்கட்சியின் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறும் முறையை ரத்து செய்துள்ளது. ஏற்கனவே பல கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட கட்சிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றாகும்.
அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம்,
“நாங்கள் தேர்தல் பத்திரம் மூலம் 1 ரூபாய் கூட நிதி பெறவில்லை. தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கிக் கணக்கு இருப்பில்13 கோடி ரூபாய் உள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றதாகக் கூறப்படும் தகவல் தவறானது.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்பதை நான் மட்டு சொல்லவில்லை, அதுபொதுவான கருத்தாக உள்ளது. அதிமுகவால் ஒரு அணி கூட உருவாக்க முடியவில்லை. ஆனால் எங்கள் அணி பலமாக உள்ளதால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.”
என்று தெரிவித்துள்ளார்.