டில்லி:

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தங்களது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத் துக்கு  உத்தரவிட வேண்டும்  என்று உச்சநீதி மன்றத்தில் டிடிவி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவுக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கமுடியாது என  தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவை மறைவை தொடர்ந்து, அவரது தொகுதியான  ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, டிடிவி தினகரன் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் ஆணையம் சார்பில்  குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது.

ஆர்கே நகரில் வெற்றிபெற்றதால், குக்கர் சின்னத்தை தனது ராசியான சின்னமாக கருதி,  திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து  காலியாக இருந்த  திருவாரூர் இடைத்தேர்தலிலும் குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தினார்.

ஆனால், தேர்தல் கமிஷன் உத்தரவாதம் அளிக்காத நிலையில், , தனது கட்சியான அமமுகவுக்கு குக்கர் சின்னமே ஒதுக்க வேண்டும் என்று டிடிவி சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணையை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் பதில்  மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கமுடியாது என  தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.