மிர்தசரஸ்

ஸ்லாமியர்களையும் குடியுரிமை சட்டத்தில் இணைக்க வேண்டும் என சிரோமணி அகாலி தளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறி உள்ளார்.

சிரோமணி அகாலி தளம் கட்சி வெகு நாட்களாக பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது.   முன்பு ஒருமுறை அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் இந்த கூட்டணி என்றும் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.  சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் தற்போது ஃபிரோஸ்பூர் மக்களவை தொகுதி உறுப்பினராக  உள்ளார்.  அவர் சமீபத்தில் அமிர்த சரஸ் நகரில் தேஜா சிங் சமுந்தரி அரங்கில் ஒரு விழாவில் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர், “நமது கட்சி தொடங்கப்பட்ட 1962 ஆம் வருடம் முதல் இன்று வரை அனைத்து மாநிலங்களுக்கும் அதிக உரிமை அளிப்பதால் நாடு வலிமை அடையும் என்பதைத் தெரிவித்து வருகிறோம்.  இதன் மூலம் ஒவ்வொரு மாநிலமும் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்து இதனால் முழு இந்தியா வளர்ச்சி அடையும்.   தற்போது மாநிலங்களுக்கு அதிகாரமில்லை.  இதனால் வளர்ச்சி இல்லை.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிதித்துறையில் முழு அதிகாரமுள்ளது  ஆனால் இங்குள்ள மாநில அரசுகள் நிதித்துறை  பற்றிய கோரிக்கைகளை மத்திய அரசுக்கு அளித்து அனுமதி பெற்ற பிறகே  அது நிறைவேற்ற முடிகிறது.   இந்த நிலை மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கவும் உள்ளது.   மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதே நிலை நீடிக்கிறது.

மற்றொரு முக்கியமான விவகாரம் மதச்சார்பின்மை ஆகும்.  குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவாதத்தின் போது நமது கட்சியின் கொள்கை மதச்சார்பின்மை என்பதைத் தெளிவு படுத்தியுள்ளேன்.   மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களுக்கும் சம உரிமை அளிப்பதும் என்பதையும் நான் தெரிவித்துள்ளேன்.

தற்போது திருத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தின் கீழ் இஸ்லாமியர்களையும் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் சிறுபான்மையினர் நலன் மற்றும் மதச்சார்பின்மை காப்பாற்றப்படுவது மட்டுமின்றி இந்தியாவின் புகழும் உலகில் உயரும்” என தமது உரையில் தெரிவித்துள்ளார்.