திருவனந்தபுரம்: ஜெனரல் பிபின் ராவத் மரணத்தை இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல மலையாள பட டைரக்டர் அலிஅக்பர் இஸ்லாமில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். அத்துடன் தனது பெயரையும் ராமசிம்ஹா என்று மாற்றியுள்ளார்.
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் பலியானார்கள். விபத்து குறித்து விசாரணை நடத்த முப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது. அத்துடன் தமிழக காவல்துறையினரும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், ஹெலிகாப்டர் விபத்து, மற்றும் விபத்தில் முப்படை தளபதி பிபின்ராவத் உயிரிழந்தது குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. சீனா, பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பிபின் ராவத் மரணத்தை வரவேற்று பல இஸ்லாமியர்களும் கருத்து பதிவிட்டும், ஸ்மைலி போட்டும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். இது பலருக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. தாய் நாட்டுக்கு எதிராக செயல்படும் சிலரது நடவடிக்கையை பலர் கடுமையாக விமர்சித்தனர். விபத்து தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட பிரபல யுடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், ஷபின் என்ற மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். தமிழக காவல்துறை, சைபர் கிரைம், நுண்ணறிவு, உளவுத்துறை போலீஸார் கண்காணிக்கிறார்கள் சமூக வலைதளங்களையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற செயல்களால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான பிரபல மலையாள பட இயக்குனர் அலி அக்பர், தான் இஸ்லாம் மதத்தில் இருந்து மாறி இந்து மதத்தில் இணைவதாக தெரிவித்துள்ளதுடன், தனது பெயரையும் ராமசிம்ஹா என்று மாற்றியுள்ளார்.
மேலும், “சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் மரணம் தொடர்பான பதிவுகளுக்கு ஸ்மைலி போடும் முஸ்லிம்களுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறியவர், இதுபோன்ற நபர்களை முஸ்லிம் மதத் தலைவர்கள் ஏன் அவர்களைத் திருத்தவில்லை?” என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.