சென்னை

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள மசூதி இடிப்பை எதிர்த்து முஸ்லிகள் போராட்டம் நடத்திய்ள்ளனர்.

சென்னை கோயம்பேடு கோதையம்மன் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு சுமார் 1000 சதுர அடியில் மூன்று மாடிகளைக் கொண்ட மசூதி ஒன்று கட்டப்பட்டது.  இது சி எம் டி ஏவுக்கு சொந்தமான இடத்தில் சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே இது குறித்து வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கில் சட்டத்துக்கு புறம்பாக மசூதி கட்ட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது  மேலும் அந்த மசூதியை இடிக்க உத்தரவிட்டது.  எனவே வரும் 15 ஆம் தேதி அன்று இந்த மசூதியை அகற்ற காவல்துறை பாதுகாப்பு கோரி சென்னை மாநகராட்சி மனு ஒன்றை அளித்துள்ளது.

இந்த மசூதியை இடிக்க எதிர்ப்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த காவல்துறையிடம்  முஸ்லிம் அமைப்ப்க்கல் அனுமதி கேட்டனர்.  ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் நேற்று மாலை கோயமேடு 100 அடி சாலை அம்பெத்கார் சிலை அருகே 200க்கும்  மேற்பட்ட முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி உளனர்.

இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.  போராட்டக்காரர்கள் அவர்களுடன் கடும் விவாதத்தில் இறங்கியதால் அங்கு சலசல்ப்பு ஏற்பட்டது.  அவர்களை கலைந்து செல்ல கோரியும் கலைந்து செல்ல மறுத்ததல அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.