“சாதி மத அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்ற இந்திய அரசியல் சட்டப் பிரிவின் 15 மற்றும் 17வது பிரிவுகள் தெளிவாகக் கூறுகின்றது.

எனினும், வெளிப்படையாக பல இடங்களில் குறிப்பிட்ட சாதியினருக்கு தனியாக அடுக்குமாடிக் குடி இருப்புகள் கட்டப்பட்டு விற்பனை செய்து வருகின்றன.

பெரும்பாலும் “பிராமணர்களுக்கு மட்டும்” எனும் விளம்பரங்கள் அதிகமாகக் காணலாம். பத்திரிக்கைகளும் அத்தகைய விளம்பரங்களை கூச்சமின்றி வெளியிடுகின்றன. பெரும்பாலும் “பிராமணர்களுக்கு மட்டும்” எனும் விளம்பரங்கள் அதிகமாகக் காணலாம்.

உதாரணத்திற்கு , சென்னை புறநகர் சிறுசேரியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தொடர்பான விளம்பரம் ஒன்று ‘இந்து’ நாளேட்டில் (ஏப்.7, 2012) வெளி வந்துது. இந்தக் குடியிருப்புகளை விலைக்கு வாங்குவோர் முன் பணம் கட்டிப் பதிவு செய்யும் நிகழ்வு 8.4.2012 ல் தொடங்குகிறது . இந்தக் குடியிருப்பு “பிராமணர்களுக்கு மட்டும்” என்று முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

இதே போன்று, கர்நாடகா-குடேபண்டே தாலுகாவில் பேக்பள்ளியில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள  ஹம்பசந்துராவில் “சங்கர அக்ரகாரம்”  எனும் அடுக்குமாடி குடியிருப்பு பிராமணர்களுக்கு மட்டும் விற்கப்படுகின்றது.

அதே வகையில், 2014ம் ஆண்டு “முஸ்லிம்களுக்கு மட்டும் என ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் , நோய்டாவில் விற்கப்படுகின்றது.

பொதுவாகவே, அடுக்கு மாடி குடியிருப்பு ஒரு குறிப்பிட்ட வருமானப் பிரிவு மக்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்படும். ஆனால் கிரேட்டர் நொய்டாவில் ஆதர்ஷ் கட்டிட நிறுவனம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைத்து விற்பனையைத் துவங்கியுள்ளது.

கிரேட்டர் நோய்டா- விளையாட்டு நகரத்தில் முஸ்லிம்களுக்கெனத் தனி அடுக்குமாடிக் கட்டிடம் என விளம்பரம் செய்யப்பட்டு முன்பதிவு / விற்பனை துவங்கியுள்ளது. வீடுகளில் டெசம்பர் 2017ல் முஸ்லிம்கள் குடிபுகலாம் என விவரம் வலைத்தளத்தில்  கொடுக்கப்பட்டுள்ளது.

muslim 2
இரண்டு அறை உள்ள வீடுகள் மற்றுன்ம் மூன்று அறைகள் உள்ள வீடுகள் விற்பனைக்கு உள்ளன.

ஆதர்ஷ் குழு, குளிஸ்தான் -கோல்ஃப் வியூ ஹைட்ஸ் எனும் அடுக்கு மாடி குடியிருப்பினை முஸ்லிம் சமூக மக்களை வாங்க ஊக்குவித்து வருகிறது.
“உயரடுக்கின் முஸ்லீம் சகோதரத்துவத்திற்கு கனவு வீடுகள்” என விளம்பரப்படுத்தி வருகின்றது.
மொத்தம் 368 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பின் விலை சதுர அடி ஒன்றுக்கு ரூ 2,500 மற்றும் ரூ 3,750 விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“3.5 ஏக்கர் இடத்தில் அது ஒரு மசூதி, ஒரு மதராசாப் பள்ளி முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்யும் திசையில் அமைந்துள்ளது” அதன் சிறப்பு என ஆதர்ஸ் குழு தெரிவித்துள்ளது.
இந்த அடுக்குமாடிக் குடிலின் கட்டுமானப் பணிகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளது.
muslim only aparment 1
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், முஸ்லிம்கள் வாடகைக்கு அல்லது சொந்தமாக வீடுகள் வாங்க இன்றும்
பெரும்பாலும் கஷ்டப்படுகின்றனர். அதனைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சி ஒரு நடைமுறைத் தீர்வு என விமர்சகர்கள் கருதுகின்றனர்.
“பிராமணர் தனியாக அக்ரகார அடுக்குமாடி குடி இருப்புகள் கட்டிக்கொள்வதற்கும், வாடகைக்கு வீடுகள் மறுக்கப் படும் முஸ்லிம்களுக்காகத் தனி அடுக்குமாடி கட்டப் படுவதையும் ஒரே தட்டில் வத்துப் பார்க்கக் கூடாது” என்கிறார், சென்னையில் வீடு கிடைக்காமல் தினமும் செங்கல்பட்டிலிருந்து பணிக்குச் செல்லும் ஒரு முஸ்லிம் நண்பர்.

muslim 2 muslim ap 3
சலீம் ஜாபர், ஆதர்ஷ் குழுவின் உரிமையாளர் “இந்தத் திட்டத்தில் வியாபார நோக்கம் மட்டுமில்லை. இந்தியாவில் முஸ்லிம்கள் சொல்லமுடியாத அள்விற்கு வேதனைகளும், புறக்கணிப்புகளுக்கும் ஆளாகின்றனர். முஸ்லிம்களுக்கு நல்ல வசதியான வீட்டில் வசிக்கும் உரிமையைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே எங்கள் கொள்கை என்றார்.
எனினும், இவ்வாறு தனி சமூகம், அல்லது சாதிக்கான அடுக்குமாடிக்கட்டிடம் குறித்து விமர்சங்களும் எழுகின்றன.
ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சாகித் ஜமால் என்பவர்” நான் இதனை வரவேற்க மாட்டேன். ஒருவர் ஏன் தன் சாதி அல்லது மத மக்கள் குடியிருக்கும் பகுதியில் மட்டும் வாழ வேண்டும்? அது பிற்போக்குத் தனமான எண்ணமில்லையா? என்றார்.
பிரபல அரசியல் ஆராய்ச்சியாளர் இம்தியாஸ் அகமது, ” இந்தியாவின் சிறப்பே, பன்முகத் தன்மை தான். எல்லா இன மக்களும் இணைந்து வாழ்வதுதான் நமது கலாச்சாரம். எனவே இது போன்ற குடியிருப்புகள் இந்தியச் சட்டதிட்டங்களுக்கு எதிரானது.
கடந்த 14 ஆண்டுகளாகத் தில்லியில் வசிக்கும் அஃப்தப் ஆலம், ” முஸ்லிம்கள் “மசூதியிலிருந்து வரும் ஆசன்/ஒதுவதைக் காலை மற்றும் மாலையில் தவறாது கேட்பது அவசியம். எனவே தான் மசூதிக்கு அருகில் மக்கள் வசிக்க விரும்புகின்றனர்.
மேலும், பல்வேறு சமூக மக்கள் வசிக்கும் பகுதியில், மதப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மேலும், ஒரு முஸ்லிமால் எளிதில் வாடககைக்கு வீடு வாங்கிவிட முடியாது. போலிசாரின் கெடுபிடி காரணமாக, வீட்டு உரிமையாளர்கள் சந்தேகக் கண்ணொடு தான் முஸ்லிம்களைப் பார்க்கின்றனர். எனவே முஸ்லிம்கள் பெரும்பாலும், ஊருக்கு ஒதுக்குப்புறமான, தரம் குறைந்த வீடுகளில் தங்க நேரிடுகின்றது” என்றார்.