உலகம் முழுவதும் ஆண்களுக்கு இணையாக அனைத்து தொழில்களிலும் பெண்கள் கோலோச்சி வரும் வேளையில், கறிவெட்டும் சவாலான தொழிலையும் ஒரு இஸ்லாமிய பெண் செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
எகிப்து, கெய்ரோவை சேர்ந்த ரவைதா ஹோஸ்னி என்ற இஸ்லாமிய பெண் ஆண்களுக்கு இணையாக சவாலான கறி வெட்டும் தொழில் செய்து வருகிறார்.
பொதுவாக கறி வெட்டும் தொழிலில் ஆண்களே கோலோச்சி வருவது வழக்கம். ஆனால், ரவைதாவோ கறிவெட்டும் தொழிலை அழகாகவும், நேர்த்தியாகவும் செய்து வருகிறார். இதன் காரணமாக அவர் அந்த தொழிலில் சிறந்த பெண்மணியாக விளங்குகிறார்.
ரவைதாவின் கறி வெட்டும் நேர்த்தி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அவர் தனது கடையில் ஒரு முழு மாடைகூட அழகாக வெட்டி, துண்டுதுண்டாக மற்றி அதை சந்தைக்கும், உள்ளூரில் உள்ள மற்ற கடைகிளுக்கும் அனுப்பி வைக்கிறார்.
இதுகுறித்து ரவைதா கூறியதாவது,
தான் இஸ்லாமிய சட்ட விதிகளின்படி கறி வெட்டும் தொழில் செய்து வருகிறேன். ஆரம்ப காலத்தில் இத்தொழிலில் தனது மகன் மற்றும் தம்பி உதவியாக இருந்தார்கள் என்றும் கூறி உள்ளார்.
தனது கணவர் நோய்வாய்ப் பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு படுக்கை யில் விழுந்தார். அதைத்தொடர்ந்து குடும்பத்தை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் நடத்தி வந்த கறிக்கடை தொழிலை தான் ஏற்றி நடத்தி வருவதாக ரவைதா கூறி உள்ளார்.
தற்போது ரவைதாவின் முழுநேரத் தொழிலே இந்த கறிவெட்டும் தொழில்தான் என்றும், அவரது இந்த செயலுக்கு சமுதாயத்தில் பலரின் எதிர்ப்பு வந்ததும் என்றும், ஆனால், எனது மகன் மற்றும் சகோதரர் ஆதரவுடன் நான் எதிர்பாளர்களின் எதிர்ப்பை போராடி வெற்றி பெற்றுள்ளேன் என்றார்.
மேலும், இஸ்லாமிய சட்டத்தில், ஒரு இஸ்லாமிர் கசாப்பு கடை நடத்தினால், அவர் கடைபிடிக்க வேண்டியது குறித்து விதிகள் வகுத்துள்ளது. இந்த விதிகளுக்கு ஹலால் தரிஹா என்று பெயர்.
இந்த விதிப்படிதான் மாமிசத்துக்காக உயிரினங்கள் வெட்டப்படுகின்றன என்று கூறினார்.
ஹலால் தரிகா விதிப்படி முதலில் ‘அல்லா’ என்று கூறியே மாமிசத்துக்காக உயிரினங்களை வெட்டுவதாகவும், இதன் காரணமாக வெட்டப்படும் விலங்கு எந்த துன்பத்துக்கும் ஆளாகாது என்பதும் அவர்களின் நம்பிக்கை.
வெட்டப்படும் மாமிசங்கள் அனைத்தும் ஹலால் செய்யப்பட்டவையே என்றும் கூறினார். மேலும்,கறி வெட்டுவது ஒரு கலை, இது அறிவியல் சார்ந்தது என்றும் கூறுகிறார் ரவைதா. கறி வெட்டுவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி தேவை என்றும் கூறி உள்ளார்.
மேலும், விதியில் ஆண்கள்தான் இந்த வேலை செய்யவேண்டும் என்று எதுவும் குறிப்பிடப்பட வில்லை. ஆகவே இந்த தொழில் நடத்த பாலினம் ஒரு விஷயமே இல்லை என்றும் கூறினார்.
ஆனால், பொதுவாக ஆண்களே இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதால், என்னை போன்ற பெண்கள் இந்த தொழிலில் ஈடுபடுவது கடும் எதிர்ப்பை உருவாக்கியது. ஆனால், நான் அதற்கு பயந்த எனது பணியை எந்த வழியிலும் நிறுத்தவில்லை என்றும், தற்போது ஒரு திறமையான கசாப்பு கடைக்காரனாக மாறி உள்ளதாகவும் கூறினார்.ங
ரவைதாவின் கேடும் உழைப்பு மகளிர் மேம்பாடு மற்றும் உழைக்கும் தொழிலாளர்கள் மிகவும் முன்னுதாரணம் என்பதில் வியப்பேதுமில்லை