பெங்களூரு

ர்நாடகாவில் அனுமன் கோவில் அமைக்க ஒரு இஸ்லாமியர் நிலம் நன்கொடையாக அளித்துள்ளார்.

கர்நாடக தலைநகரான பெங்களூருவில் காடுகொடிபகுதியில் ஒரு அனுமன் ஆலயம் அமைந்துள்ளது,   அந்தப் பகுதியில் உள்ள பலருக்கு இது மிகவும் விருப்பமான கோவிலாக இருந்தது.   இந்த கோவிலில் வேண்டுதல் செய்தால் உடனடியாக நிறைவேறும் என்னும் நம்பிக்கையால் அதிக அளவில் பக்தர்கள் வரத் தொடங்கினர்.

இந்த அனுமன் கோவில் மிகவும் சிறிய கோவில் ஆகும்  எனவே பக்தர்கள் அதிக அளவில் வருவதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு மிகவும் சிரமம் உண்டானது.  இதே பகுதியில் வசித்து வந்த எச் எம் ஜி பாசா என்னும் இஸ்லாமியருக்கு இது ஒரு குறையாகப் பட்டது.

எனவே அவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு பகுதியை அனுமன் கோவில் கட்ட நன்கொடையாக அளித்துள்ளார்.  ஒரு இஸ்லாமியர் அனுமன் கோவிலுக்கு நிலம் நன்கொடையாக வழங்கியது கர்நாடகாவை மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆச்சரியத்தை எழுப்பி உள்ளது.