சென்னை

சையமைப்பாளர் இளையராஜா குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

 

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி அஜித்குமார் நடிப்பில் வெளியான  ‘குட் பேட் அக்லி’. படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த பட்டத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மிகப்  பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த ‘குட் பேட் அக்லி’ படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இசையமைப்பாளர் இளையராஜா ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இலையராஜா அந்த நோட்டிஸில்.

என் ஜோடி மஞ்ச குருவி’, ‘இளமை இதோ’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’ என்ற தன்னுடைய 3 பாடல்களை அனுமதியின்றி ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தியுள்ளதால் ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும், இல்லையென்றால் வழக்கு தொடரப்படும்”

 என மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.