டெல்லி: மற்றொருவர் இசையை அவரது அனுமதியின்றி திருட்டுத்தனமாக பயன்படுத்தியதாக, பதிப்புரிமை மீறல் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், பிரபல இசைஅமைப்பாளர் ஆஸ்கார் புகழ் ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற வீரா ராஜ வீரா பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடல், சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளதாக, சிவா ஸ்துதி பாடல் ஆசிரியர் தொடர்ந்த வழக்கில்,, டெல்லி உயர்நீதிமன்றம் ரூ.2 கோடி நீதிமன்றத்தில் செலுத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆணையிட்டுள்ளது.
காப்புரிமை விவகாரத்தில் ரூ.2 கோடியை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலிலும் சாதனை படைத்தது. இந்த இரு படங்களின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் உள்ள ‘வீர ராஜா வீரா’ பாடல் தனது தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் இயற்றிய சிவா ஸ்துதி என்ற பாடல் என்றும், இதை தங்களது அனுமதியின்றி, திருட்டுத்தனமாக ஏஆர் ரகுமான் பயன்படுத்தி இருப்பதாக இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திடிருந்தார்
இந்த வழக்கு ஏப்.25 அன்று விசாரணைக்கு வந்தபோது, பொன்னியின் செல்வன் படத்தின் வீரா ராஜா வீரா பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது, மேலும், இதுதொடர்பாக ரூ. 2 கோடி தொகையை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையின்போது, சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலால் ‘வீர ராஜா வீரா’ பாடலை இயற்றப்பட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டதாக உத்தரவின்போது நீதிமன்றம் பதிவு செய்தது.