சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று காலை அவரது இல்லத்தில் காலமானார்.

இந்தியா மட்டுமின்றி ஹாலிவுட்டின் தடம் பதித்தவர் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான். இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை பெறறவர். அவரது தாயார் கரீமா பேகம். வயது 73. இவர் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி கரீமா பேகத்தின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு தமிழ் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel