சென்னை:  தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள  நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான, உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் என பல தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளி யிட்டுள்ள இளையராஜா, அமைச்சர் பொறுப்பை சரிவர நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும், புகழும் அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். கண்டிப்பாக நிறைவேற்று வீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.