சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் பேசிய நபர் ஒருவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுதுவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் விசாரணை நடத்தினர்.
இதில், போனில் பேசிய நபர்,திண்டுக்கலில் இருந்துபேசியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மர்ம நபர் குறித்து திண்டுக்கல் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில், போனில் மிரட்டல் விடுத்த வத்தலக்குண்டு அடுத்த விராலிப்பட்டியை சேர்ந்த குருசங்கர் என்பது தெரிய வந்துள்ளது. அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
[youtube-feed feed=1]