அருள்மிகு கைலாசநாதர் கோயில் முறப்பநாடு
இக்கோயிலை கட்டியவர் வள்ளல் மகாராஜா மிருந்த முனிவர் பாதயாத்திரை செய்த இடமும் ஸ்ரீ ராமர் பாதம் பட்ட இடமும் காஞ்சனர் மலைக்கு மோட்சம் அளித்த இடமும் இதுவே.இதுவே சோழ மன்னன் ஒருவன் தனக்கு குதிரை முகத்தோடு பிறந்த பெண் குழந்தையை கண்டு கவலையடைந்தான்.தனது மகளுக்கு அமைத்துள்ள குதிரை முகம் மாற வேண்டி சிவா பெருமானை எண்ணி தவம் இருந்தான்.
சிவபெருமான் இவர் முன் தோன்றி முறப்பநாடு தாமிரபரணி நதிக்கரையில் போய் நீராடுக என ஆசி வழங்கினார். சிவபெருமானின் திருவுளப்படி சோழ மன்னன் தன் மகளோடு வந்து இங்குள்ள தீர்த்த கட்டத்தில் நீராடினான்.உடனே சோழ மன்னனின் மகளது முகம் மனித முகமாக மாறியது.பின்னர் சிவபெருமானுக்காக சோழ மன்னன் இக்கோயிலை கட்டினான்.
தனிச் சிறப்பு
நவகைலாயத்தில் ஐந்தாவது இடத்தை பெறுவது முறப்பநாடு ஆகும்.இந்த கோயில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது.குருபகவானின் அருள் பெற நாம் வழிபட வேண்டிய திருத்தலம் முறப்பநாடு ஆகும்.முறப்பநாடு பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் நவகைலாயத்தின் வியாழ பகவானை விட்டிருக்கும் அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில் அமைத்துள்ளது.
இயற்கை காலில் சூழ்ந்த வனப்புடன் பசுமை கொஞ்சும் காலில் கண்ணனுக்கு விருதாக உள்ளது.வாழை தோட்டங்களும் வயல் வெளிகளும் நிறைந்தஅப்பகுதி சிந்தை கவர்கிறது.நவகாலயத்தின் எந்த கோயிலுக்கும் இல்லாத தனிச் சிறப்பு சிவா பெருமான் குருபாகவனாக அருள் பாலிக்கும் முரப்பாணத்திட்கு மட்டுமே உண்டு.புண்ணிய மதியம் தாமிரபரணி ஆறு காசியில் உள்ளது போன்று வடகிலுருந்து தெற்கு நோக்கி செல்கிறது.இதனால் இந்த இடத்திற்கு தட்சிணா கங்கை எனப் பெயர்.இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம் என்று கூறுவார்கள்.
குரு ஆதிக்கத்தில் உள்ள ராசி நட்சத்திரங்கள்
மூலம்,பூராடம்,உத்திராடம்,பூரட்டாதி
பூஜை நேரங்கள்
திருவனந்தல் காலை 6.௦௦ மணி
உச்சி காலம் காலை 10.௦௦ மணி
சாயரட்சை மாலை 3.௦௦ மணி
அர்த்த சாமம் மாலை 8 :3௦ மணி
போக்குவரத்து வசதி
திருநெல்வேலிலிருந்து 17 கி.மீ தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள ஊர் முறப்பநாடு.
திருநெல்வேலிலிருந்து வல்லநாடு கொங்கராயக்குறிச்சி, கலியாவூர், உலக்குடி, பூவாணி, ஆல்வார்கற்குளம் செல்லும் நகர பேரூந்துகள் அடிக்கடி செல்கின்றன.
திருநெல்வேலி இல் இருந்து தூத்துக்குடி செல்லும் எல்லா பேருந்துகளும் முறப்பநாடு நிற்கும்.
தங்குமிடம்
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் தங்கும் விடுதிகள் உள்ளன.