சென்னை: தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, சிறைகள்துறைகளுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மாணவ விடுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.477.42 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், துறை அமைச்சர் கே.என்.நேரு உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு ரூ.105.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல்துயை உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் மற்றும் பணிபுரியும் மகளிருக்காக ரூ.10.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
காரைக்குடியில் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நினைவுப்பரிசு விற்பனையகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்