இரண்டு முட்டைகளின் விலை ரூ 1700 -ஆ என கொந்தளிக்கிறது சமூகவலைத்தளம்….!

Must read

நடிகர் ராகுல் போஸ் பதிவிட்ட வாழை பழம் சார்ச்சையே இன்னும் முடிவடையாமல் இருக்கும் நிலையில் புதியதாக ​​ஒரு உயர்நிலை ஹோட்டலின் மற்றொரு ‘நியாயப்படுத்தப்படாத’ பில்லிங் முறை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சண்டிகரின் ஜே.டபிள்யூ மரியட்டுக்கு பிறகு, மும்பையின் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் தான் சமூக ஊடகங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது .

இரண்டு வேகவைத்த முட்டைகளின் விலை ரூ .1,700 மற்றும் இரண்டு ஆம்லெட்டுகள் ரூ 1700 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன .

ட்விட்டர் பயனர் கார்த்திக் தர் , “2 முட்டைகள்” என்ற தலைப்பில் அந்த ஹோட்டலின் பில்லை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் போஸின் இரண்டு வாழைப்பழம் ரூ 442 என்பது 18 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து தான் என FHRAI துணைத் தலைவர் குர்பக்ஸிஷ் சிங் கோஹ்லி ஜே.டபிள்யூ மரியட்டுக்கு சாதகமாக பேசினாலும் இதை ஏற்றுக்கொள்வது கடினம் என போர் கோடி தூக்குகிறது சமூக வலைத்தளம்.

More articles

Latest article