
சென்னை: ஐதராபாத் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பேட்டிங் தேர்வுசெய்துள்ளது.
மும்பை அணி இதுவரை ஆடிய 2 போட்டிகளில், தலா 1 வெற்றி தோல்வியுடன் உள்ளது. அதேசமயம், டேவிட் வார்னரின் ஐதராபாத் அணி, தான் இதற்குமுன் ஆடிய 2 போட்டிகளிலும் தோற்று பின்தங்கியுள்ளது.
மும்பை அணியின் துவக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் ரோகித் ஷர்மா களமிறங்கியுள்ளனர். அந்த அணி 2 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 16 ரன்களை எடுத்துள்ளது. மும்பை அணியில், புதிதாக ஆடம் மின் இடம்பெற்றுள்ளார்.
ஐதராபாத் அணியைப் பொறுத்தவரை, இன்றும் கேன் வில்லியம்சன் இடம்பெறவில்லை. மிக முக்கிய வீரரான அவரை, எதற்காக அந்த அணி புறக்கணிக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
[youtube-feed feed=1]