மும்பை:
மும்மையில் பிடிஐ செய்தி நிறுவனம் மற்றும், யூகோ பாங்க் தலைமையகம் அமைந்துள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை டிஎன் சாலையில் உள்ள கட்டிடத்தில் இன்று மதியம் 2 மணியளவில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது. இக்கட்டிடத்தில்  பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் மண்டல அலுவலகமும், யூகோ வங்கியின்  மண்டல தலைமையகம் அமைந்துள்ளது.
uco bank
விநாயகர் சதுர்த்தி அடுத்து இன்று விடுமுறை தினம் என்பதனால் கட்டிடத்தில் குறைவானவர்களே பணியில் இருந்துள்ளனர். இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் யாருக்கும்  எந்தவித விபத்தோ, காயமோ ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.
தீ விபத்து குறித்து தகவல் வந்ததையடுத்து,  தீ அணைக்க 10 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களின் 3 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
வரலாற்று சிறப்பு பெற்ற பவுண்டைன் கார்டன்ஸ் மற்றும் தியாகிகளுக்கான சதுக்கம் அருகே இக்கட்டிடம் அமைந்துள்ளது.  பி.ஆர். அம்பேத்கரால் நிறுவப்பட்ட சித்தார்த்தா கல்லூரிக்கு எதிரே இந்த கட்டிடம் உள்ளது. மேலும் மும்பை  நகருக்கு அடையாளம் தரும் உயர் நீதிமன்றம், மியூசியம் மற்றும் பல கலை கூடங்களும் இந்த கட்டிடத்தின்  அருகே  உள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்த போலீசாரின்  முதற்கட்ட ஆய்வில், கிரவுண்டு புளோரில் ஏற்பட்ட மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.