
சென்னை: ஐதரபாத் அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்களை சேர்த்தது.
இன்றைய துவக்க வீரர் குவின்டன் டி காக், அதிகபட்சமாக 40 ரன்களை அடித்தார். ஆனால், அதற்கு 39 பந்துகளை எடுத்துக்கொண்டார். கேப்டன் ரோகித் 32 ரன்களை சேர்த்தார். பொல்லார்டு 22 பந்துகளில் 35 ரன்களை அடித்தார். அவற்றில் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இஷான் கிஷான் 12 ரன்களும், சூர்யகுமார் 10 ரன்களும் சேர்க்க, மும்பை அணி 150 ரன்களை எட்டியது.
ஐதராபாத் தரப்பில், விஜய் சங்கர் மற்றும் முஜிபுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
எட்டக்கூடிய சுமாரான இலக்காக இருந்தாலும், ஐதராபாத் அணி, அதை எட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்றையப் போட்டியில் வென்றால், ஐதராபாத் அணி தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்யலாம்.
[youtube-feed feed=1]