மும்பை :
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை சம்பவத்தின் தொடர்ச்சியாக அவரது காதலி ரியா சக்ரவர்த்தி, போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார்.
கிட்டத்தட்ட ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரியாவுக்கு பம்பாய் உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் மும்பை போலீஸ் துணை ஆணையாளர் சங்கராம் சிங் நிஷாந்தர், “ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள ரியாவை ஊடகங்கள் காரில் துரத்தி சென்று தொந்தரவு கொடுக்கக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.
’’செய்தி சேகரிப்பதற்காக பிரபலங்களை காரில் துரத்தி செல்வது கிரிமினல் குற்றம்‘’ என்று குறிப்பிட்ட அவர் ’’இது போன்ற செயல்கள் அவர்கள் உயிருக்கு மட்டுமல்லாது சாலையில் செல்லும் அப்பாவி மக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்‘’ என்று கூறியுள்ளார்.
“பிரபலங்களை காரில் துரத்தும் ஓட்டுநர்கள் மற்றும் அவர்களை தூண்டிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என போலீஸ் துணை ஆணையாளர் நிஷாந்தர் எச்சரித்துள்ளார்.
– பா.பாரதி
Patrikai.com official YouTube Channel