மும்பை: மும்பையின் மலாட் பகுதியில் உள்ள  21 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை உயிர் சேதம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையின் மலாட் பகுதியில் உள்ள ஜான்கல்யான் நகரில் உள்ள மெரினா என்கிளேவ் எனப்படும் 21 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலின்படி, தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மெரினா என்கிளேவ் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ, 11:15 மணியளவில் அணைக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.