டெல்லி: கிரேட்டர் நொய்டா  பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து; சம்பவ இடத்துக்கு வந்த 12 தீயணைப்பு வாகனங்களில் 24 பேர் மீட்கப்பட்டனர். தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா மேற்கு பகுதியில் உள்ள ஷாபெரி பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று மதியம் (டிசம்பர் 3-ம் தேதி)  பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இரண்டு டஜன் பேரை மீட்டதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. இந்த தீவிபத்தானது பொதுமக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிம் என கூறப்படுகிறது.

இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. காவல்துறை இணை ஆணையர் ரவிசங்கர் சாபி கூறுகையில், ஷாபெரியில் உள்ள ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. . தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.