மும்பை,
மும்பையில் அதிரடியாக செயல்பட்டு வரும் ராஜ்தாக்கரேயின் நவநிர்மான் கட்சியின் மாநகராட்சி உறுப்பினர்கள் 6 பெர் திடீரென உத்தவ் தாக்கரே கட்சிக்கு தாவினர். இது மும்பபையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக ராஜ்தாக்கரேவுக்கும், உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய கட்சி தலைவர் பால்தாக்கரேவிடம் இருந்து விலகி தனி கட்சி தொடங்கினார் ராஜ்தாக்கரே.
அதன்பிறகு தனியாக களத்தில் நிற்கும் ராஜ்தாக்கரே கடந்த மும்பை மாநகராட்சி தேர்தலின்போது போட்டியிட்டு, 7 வார்டுகளை கைப்பற்றினார். அதன் காரணமாக 7 மாமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தார்.
இந்நிலையில், ராஜ்தாக்கரேயின், நவநிர்மான் சேனாவை சேர்ந்த மும்பை மாநகராட்சி உறுப்பினர்கள் 6 பேர், சில நாட்களுக்கு முன் சிவசேனா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன் மூலம் மும்பை மாநகராட்சியில் சிவசேனா உறுப்பினர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்தது.
ஆனால் ராஜ்தாக்கரேயின் நவநிர்மான் சேனாவின் பலம் 1-ஆக குறைந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தற்போது அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தங்களது கட்சி உறுப்பினர்களை அவரது கட்சிக்கு இழுக்க ஒவ்வொருவருக்கும் தலா 5 கோடி ரூபாய் உத்தவ் தாக்கரே கொடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் அசுத்தமான அரசியல் செய்துவருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தான் ஒருபோதும் உத்தவ் தாக்கரேவின் சூழ்ச்சியை மறக்கமாட்டேன் எதிர்காலத்தில் இதற்கு தகுந்த பதிலடி கொடுப்பேன் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.