டார்ஜிலிங்,

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 3 மாத காலமாக நிறுத்தப்பட்டிருந்த மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் நியூஜல்பைகுரியில் இருந்து டார்ஜிலிங் வரையிலன  88 கிலோமீட்டர் தூரத்துக்கு இயக்கப்படும் இந்த ரெயில் சேவை கூர்க்காலாந்து போராட்டம் காரணமாக இந்த நிறுத்தப்பட்டிருந்தது.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் அதிகளவிளான கூர்க்கா இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் கூர்காலாந்து என்ற தனி மாநில வேண்டும் என்றும், வங்க மொழி திணிப்பை ஏதிர்த்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.

கடந்த ஜூன் மாதம் இந்த போராட்டம் தொடங்கியது. போராட்டக்குழு தலைவர் பிமல்குருங் தலைமையில் 104 நாட்களாக  பந்த், முற்றுகை, ஆர்ப்பாட்டம் என பல போராட்டங்கள்  காரணமாக  மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது.

அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 27ந்தேதி  கூர்கா லேண்ட் போராட்ட குழு தலைவர் பிமல் குருங், டில்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது ஏற்பட்ட உடன்பாடு காரணமாக போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து,  நியூஜல்பைகுரியில் இருந்து டார்ஜிலிங் வரையிலன  88 கிலோமீட்டர் தூர ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும்,  சிலிகுரியில் இருந்து சுக்னா என்னும் இடம் வரையான 35 கிலோமீட்டர் தூரத்துக்கு மலை ரயில் சேவை சோதனை முறையில் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சோதனை முறையில் ரெயில் சேவை நடைபெற்று வருவதாகவும்,  அனைத்து தொழில் நுட்பத்துறை யினரின்  சோதனைகள் முடிந்த பின் ரெயில் சேவை முழுமையாக இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.