டில்லி,

முல்லைப்பெரியாறு அணையை பராமரித்து வரும் தமிழகஅரசுக்கு கேரளா இடையூறு செய்து வருவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை பிறப்பித்தது. தமிழகத்தின் பல ஆண்டுகள் சட்டப்போராட்டத்தை தொடர்ந்து முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக அணையை திறம்பட பராமரிப்பு செய்து வருகிறது.

இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  அணையை பராமரிக்க அனுமதிக்காமல் இடையூறு செய்து வருகிறது.

கேரளாவின் அடாவடிதனத்தை எதிர்த்து  தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.எஸ். கேகர், நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.கே.கவூல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது.

இது தொடர்பாக கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை வருவதால், தமிழக அரசின் மனு மீதான விசாரனை ஜூலை 2-வது வாரம் நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.