
டில்லி,
முல்லைப்பெரியாறு அணை அருகே வாகன நிறுத்தம் அமைப்பது தொடர்பாக இரு மாநில முதல்வர்களுக்கு இடையே வரும் டிசம்பர் 11ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியா அணை அமைந்துள்ள தேக்கடி ஆனைவாசல் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைப்பதற்கான நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பாக, பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறி ஞர்கள், இந்த பிரச்சினை தொடர்பாக இரு மாநில முதல்வர்கள் இடையே வரும் டிசம்பர் 11ந்தேதி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
[youtube-feed feed=1]