தேனி,

முல்லை பெரியாறு அணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம்  2014ம் ஆண்டு  பிறப்பித்த உத்தரவின்படி முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அணையின் உறுதித்தன்மை குறித்து அணையில் தண்ணீர் தேக்குவதை கண்காணிப்ப தற்காக மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமனம் செய்தது.

இந்நிலையில் முல்லை பெரியாறு அணை குறித்த வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில்  தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், “முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. அணையின் உறுதித்தன்மை குறித்து மக்களிடம் போதுமான விழிப்புணர்வு தேவை” என்று கூறியுள்ளது.

மேலும் அணையை பரிசோதிக்க தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.