பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய  மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் மீது மாநிலஅளுநர் வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் வழங்க மாட்டார் என மாநிலமுதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாநில ஆளுநர் (Thawar Chand Gehlot) தவார் சந்த் ஹெலாட் ஒப்புதல் வழங்கி உள்ளார். இது மாநில அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. சித்தராமையாவின் மனைவி பார்வதியின் பெயரில் மைசூரு கேசரே பகுதியில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக, விஜயநகர் பகுதியில் கூடுதல் மதிப்புள்ள நிலங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 கடந்த 2023 பேரவைத் தேர்தலில் மனைவியின் இந்த சொத்து குறித்த தகவல்களை தனது வேட்பு மனுத்தாக்கலின்போத தற்போதைய முதல்வர்  சித்தராமையா வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கர்நாடக மாநில  சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஆபிரஹாம் என்பவர் தேர்தல் ஆணையத்திடம்  புகார் அளித்துள்ளார். மேலும் இந்த முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி ஆளுநரையும் சந்தித்தார்.

இதையடுத்து இந்த புகார் குறித்து,  ஆளுநர் தலைமைச் செயலர் மற்றும் சட்ட வல்லுநர்களிடம்  விசாரிக்க உத்தரவிட்டதுடன், அவர்களிடம் இருந்து அறிக்கையும் பெற்றார். தொடர்ந்து, இந்த  புகார் குறித்து விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த பரபரப்பான ோலில்,  முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் ஆப்ரஹாம், மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை மீண்டும் சந்தித்து வலியுறுத்தினார். . இதையடுத்து ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மாநில மதல்வர்  சித்தராமையா,  இது கர்நாடக அரசைக் குறிவைக்கும் மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி என்றும் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து மாநில முதல்வர்மீது வ ழக்குத் தொடர கவர்னர் அனுமதி அளித்ததைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்றும் காங்கிரஸ்  அறிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 7ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த மாநில முதல்வர் சித்தராமையா,  என் மீது வழக்கு தொடர அளிக்கப்பட்டுள்ள மனுவை ஆளுநா் நிராகரிப்பாா் என நம்பிக்கை தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மாற்றுநில ஒதுக்கீடு தொடா்பாக எல்லாம் சட்டப்படி இருப்பதால், கா்நாடக அமைச்சரவையின் முடிவை ஆளுநா் ஏற்றுக்கொள்வாா் என்று நம்புகிறேன். மாநிலத்தில் அரசமைப்புச் சட்டத்தின் தலைமைப் பொறுப்பில் ஆளுநா் இருக்கிறாா். அரசமைப்புச் சட்டத்தின்படி எல்லாம் சரியாக இருக்கும்போது, அதை ஆளுநா் ஏன் ஏற்க மாட்டாா்? அண்மையில் தில்லியில் பிரதமா், மத்திய உள்துறை அமைச்சா் ஆகியோரை ஆளுநா் சந்தித்துப் பேசியிருக்கலாம். அதில் அரசியல் சதிக்கு வாய்ப்பிருப்பதாக நான் கருதவில்லை. என் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு அளிக்கப்பட்டுள்ள மனுவின் அடிப்படையில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட் எனக்கு ஒரு நோட்டீஸை அனுப்பியுள்ளாா். அதற்கு நான் பதிலளித்துள்ளேன்.

இதுகுறித்து விளக்கமளிக்க ஆளுநா், தலைமைச் செயலாளரை அழைத்திருந்தாரா என்று எனக்கு தெரியவில்லை. டெல்லி  பயணத்தில் இருந்து திரும்பியிருந்ததால், புதிய தலைமைச் செயலாளராக பதவியேற்றதைத் தொடா்ந்து ஆளுநரை மரியாதை நிமித்தமாக ஷாலினி ரஜ்னிஷ் சந்தித்திருக்கலாம்.

காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை இழுக்க பாஜகவினா் ஏற்கெனவே முயற்சித்தனா். அம்முயற்சியில் பாஜக வெற்றிபெறவில்லை. தற்போது பாஜகவும், மஜதவும் கூட்டணி அமைத்துள்ளதால், இருகட்சிகளும் சோ்ந்து காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க முயற்சித்து வருகிறாா்கள்.

ஏழைகளுக்காக உழைத்து வருவதாலும், வாக்குறுதி திட்டங்களை அமல்படுத்தி வருவதாலும், என்னை குறிவைத்து இரு கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. பொய்ப் பிரசாரங்களால் எனது அரசைக் கவிழ்க்க முடியாது. அரசு கையகப்படுத்திய நிலத்தை காசோலையில் பணம் பெற்றுக்கொண்டு விடுவித்ததால் முன்னாள் முதல்வரும், பாஜக முன்னணித் தலைவருமான எடியூரப்பா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அப்படி நான் என்ன செய்திருக்கிறேன் என்றவர்,  நான் தவறு செய்திருப்பதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள், உத்தரவுகள் ஏதாவது இருக்கின்றனவா?  என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பேசியவர்,  எனது மனைவி பாா்வதியின் 3.16 ஏக்கா் நிலத்தை மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் கையகப்படுத்திய போது, அதற்கு மாற்றுநிலம் ஒதுக்கும்படி எனது மனைவி மனு அளித்திருந்தாா். நான் முதல்வராக இருக்கும் வரை மாற்று நிலம் ஒதுக்க மாட்டேன் என்று கூறி வந்தேன். 2021-இல் எனது மனைவி மீண்டும் ஒரு மனுவை வளா்ச்சி ஆணையத்துக்கு கொடுத்திருந்தாா். அப்போது பாஜக ஆட்சியில் இருந்தது. அப்போது நான் எப்படி நிலத்தை ஒதுக்க அழுத்தம் கொடுத்திருக்க முடியும்? முந்தைய பாஜக ஆட்சிதான் ஊழல் ஆட்சி.   பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்கள், அதன் நிலை குறித்து எல்லாவற்றையும் விளக்கி கூறவிருக்கிறேன் என்றாா்.