நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ரசிகர் ஒருவர் காலில் விழுந்த போது, தோனி செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.

dhoni

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-1 என வென்ற நிலையில், டி20 தொடரை 1-2 என இந்திய அணி தோல்வியடைந்தது.

நேற்று 3வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது, விக்கெட் கீப்பிங்கில் ஈடுபட்டிருந்த தோனிடம் ஆசிப்பெற வந்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பையும் மீறி, மைதானத்தில் தோனியில் காலில் விழுந்தார். அப்போது அந்த ரசிகர் கையில் தேசியக் கொடியை வைத்திருந்தார். தேசியக் கொடியுடன் அந்த ரசிகர் குனிந்த போது அவர் கையில் வைத்திருந்த தேசியக் கொடி கீழே படாதவாறு தோனி பிடித்துக் கொண்டார்.

அதன் பின்னர் தனது காலில் விழுந்த ரசிகரை தோனி எழுந்து போக சென்னார். தேசிய கொடி கீழே விழக்கூடாது என்பதற்காக தோனி செய்த காரியத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதற்கு முன்னதாக தோனியிடம் ஆசி வாங்க 14 முறை இதே போன்று ரசிகர்கள் நடந்து கொண்டதாக ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக மற்ற வீரர்களை போல் நீங்கள் அணியும் ஹெல்மெட்டில் தேசியக் கொடி இல்லையே இஎன ஒருமுறை செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, “ நான் தேசியக் கொடியின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கீப்பிங் செய்யும் போது ஹெல்மெட்டை அவ்வபோது கழற்றி கீழே வைப்பேன். அதனால் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான் என் ஹெல்மெட்டில் நான் தேசியக் கொடியை வைத்திருப்பதில்லை” என பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.