சென்னை வந்த தோனிக்கு சிறப்பான வரவேற்பு

Must read

சென்னை:

பிஎல் கிரிக்கெட் தொடர் பயிற்சிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னை வந்தடைந்தார்.

2020-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழா முடிந்து அரங்கேறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும்-சென்னை அணியும் விளையாட உள்ளன.


இந்நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்க பயிற்சி எடுப்பதற்காக மஹேந்திரசிங் தோனி சென்னை வந்தடைந்தார். விமானம் மூலம் சென்னை வந்தடைந்த தோனிக்கு சிஎஸ்கே நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து தங்கியிருக்கும் நட்சத்திர விடுதிக்கு சென்ற தோனி, அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்த்து ரசித்தார். தோனியின் சென்னை வருகையை சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னையில் தோனி மார்ச் 19ஆம் தேதி வரை பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக சிஎஸ்கே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

More articles

Latest article