க்ரைஸ்ட்சர்ச்:

ந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில்  7 விக்கெட் வித்தியாசதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களுக்கும், நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 7 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். களத்தில் இருந்த விஹாரி 9 (18) ரன்கள், ரிஷப் பண்ட் 4 (14) ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்தவர்களில் ஜடேஜா மட்டும் 16 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 46 ஓவர்களில் 124 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக புஜரா 24 ரன்கள் எடுத்திருந்தார்.

நியூசிலாந்து சார்பில் டிரண்ட் போல்ட் 4 விக்கெட்களையும், சவுதி 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய நியூநிலாந்து அணி, உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது.   இத்துடன் 0-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.  இந்த தோல்வி மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல்முறையாக தொடரை இழந்தது இந்தியா.