கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தலால் சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும், அந்தப் பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், என்ன நடக்கிறது பள்ளிகளில்? குழந்தைகள் படிப்பதா இல்லையா?

சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக்கூடாது. அந்த வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும். அதுவும் விரைவாக. இதுவே என் வேண்டுகோள்’ எனத் தெரிவித்திருக்கிறார்.