நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வாக்களிக்க அல்லது பேசுவதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டை அழிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறுயுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்கள் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் வாக்களிக்க அல்லது பேச லஞ்சம் பெற்ற வழக்கிலிருந்து விடுபட முடியாது என்று தீர்ப்பளிக்கிறது.
நாடாளுமமன்றம் அல்லது சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் வாங்கியதாக எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கில் இருந்து விலக்கு அளித்து 1998 ஆம் ஆண்டு பி.வி. நரசிம்ம ராவ் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்தது.
பி.வி. நரசிம்ஹாவின் தீர்ப்பில் நாங்கள் உடன்படவில்லை என்றும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஊழல் மற்றும் லஞ்சம் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டை அழிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.