டில்லி:

ராஜ்யசபா எம்.பி.யாக 6 ஆண்டில் பெற்ற முழு சம்பளத்தையும் பிரதமர் நிவாரண நிதிக்கு டெண்டுல்கர் நன்கொடையாக வழங்கினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டெண்டுல்கர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில் இவரது பதவி காலம் முடிவடைந்தது. 6 ஆண்டில் அவர் சம்பளம் மற்றும் இதர படிகளாக பெற்ற ரூ. 90 லட்சத்தை, அவர் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினார். இவரது செயலை பிரதமர் அலுவலகம் பாராட்டி கடிதம் எழுதியுள்ளது.

டெண்டுல்கரோடு, நடிகை ரேகாவும் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இருவரும் ராஜ்யசபா நிகழ்வுகளில் அதிகம் கலந்தகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. டெண்டுல்கர் தனது உள்ளூர் மேம்பாட்டு நிதியை உரிய முறையில் பயன்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் 185 திட்டங்களுக்கு ரூ.7.4 கோடியை ஓதுக்கீடு செய்துள்ளார். கல்வி மற்றும் இதர மேம்பாடு, கட்டுமானம், வகுப்பறை புதுப்பிப்பு போன்ற பணிகளுக்கு ரூ. 30 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். ஆந்திராவில் புட்டம் ராஜூ கந்ரிகா மற்றும் மகாராஷ்டிராவில் டோன்ஜா ஆகிய இரு கிராமங்களை டெண்டுல்கள் தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.