போபால்:
மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.சி.சர்மா எமாநிலத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் ஹேமமாலைனி கன்னம் போல மாறும் என்று கூறினார். அமைச்சரின் இந்த ஜொல்லு பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாஜக கோட்டையை தகர்ந்தெறிந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக கமல்நாத் உள்ளார். அங்கு கந்த சில மாதங்கள் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக மாறி உள்ளது.
இதுகுறித்து குற்றம் சாட்டிய முன்னாள் பாஜக முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான், நான் வாஷிங்டனில் பார்த்த சாலை களை விட மத்தியப் பிரதேசத்தில் சூப்பராக சாலைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது குண்டும் குழியுமாக மாறி உள்ளது என்று விமர்சித்து இருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள், மாநில அமைச்சர் பி.சி.சர்மாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், வாஷிங்டன் சாலைகளை விட சிறப்பாக அமைக்கப்பட்ட சாலைகள் கனமழையால் குண்டும், குழியுமாக மாறி விட்டன. தற்போது விஜய்வர்கியா(பாஜக தலைவர்) கன்னங்கள் போல் சாலைகள் காணப்படுகின்றன. இந்த சாலைகள், இன்னும் 15 நாட்களில் ஹேமமாலினி கன்னங்கள் போல் மாறும். புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அமைச்சர் பி.சி.சர்மாவின், ஹேமமாலினி கன்னம் குறித்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.