கெவாடியா,குஜராத்

பிரதமர் மோடியின் அணைத் திறப்பு விழாவுக்காக ம. பி. அரசால் திறந்து விடப்பட்ட நர்மதா நதி நீர் நிறுத்தப் பட்டதால் குஜராத்தில் நீர் பஞ்சம் ஏற்பட உள்ளது.

குஜராத் மாவட்டம் கவாடி கெவாடியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சர்தார் சரோவர் அணை.   நர்மதா நதியின் இடையில் கட்டப்பட்ட இந்த அணையை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி திறந்து வைத்தார்.   குஜராத் தேர்தலுக்கு சில தினங்கள் முன்பு நடந்த இந்த நிகழ்வின் போது அணையின் முழு கொள்ளளவுக்கு சிறிதே குறைவாக நீர் இருந்தது.

அந்த நிகழ்வு நடந்த சமயத்தில் அணையில் இந்த அளவு நீர் வரத்து இருக்க வாய்ப்பே இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.   பிறகு அந்த நீர் அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் இருந்து மோடியின் விழாவுக்காக திறந்து விடப்பட்டது என கண்டறியப்பட்டது.   அந்த நேரத்தில் மத்தியப் பிரதேச அரசு வழக்கமாக திறந்து விடுவதைப் போல பல மடங்கு அதிகமாக திறக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ஐந்து தினங்கள் ம.பி.  அரசு நீரை திறந்து விட்டுள்ளது.  இந்த ஐந்து நாட்களில் முதல் இரண்டு தினங்களில் 0.3 மீட்டர் கொள்ளளவு மட்டுமே அதிகரித்த இந்த அணையில் பிறகு கட கட வென அதிகரித்துள்ளது.   மத்திய நதி நீர் ஆணையம் அனுமதித்த அளவில் பெரும் பகுதி அந்த மூன்று தினங்களில் மத்தியப் பிரதேச அரசு மோடியின் அணைத் திறப்பு விழாவுக்காக திறந்துள்ளது.   தற்போது அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் குஜராத் மாநிலத்தில் வரும் கோடைக் காலங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.   சமூக ஆர்வலர்கள் மத்திய பிரதேசம் சொல்வதை மறுத்துள்ளனர்.   அணை திறந்ததற்கு முன்புள்ள ஐந்து தினங்களில் அதாவது செப்டம்பர் 12-17 வரை 5.32மிமீ மழை பொழிந்துள்ளதாகவும் அதையும் மத்தியப் பிரதேச அரசு தாங்கள் திறந்த நீருடன் இணைத்து விட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த அணை குஜராத்தில் 18 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புக்கு பாசன வசதி தர வேண்டி உள்ளது.  குஜராத்தில் சுமார் 10 லட்சம் விவசாயிகள் இதனால் பயனடைய உள்ளனர்.  மேலும் 75,000 கிமீ தூரத்துக்கு வெட்டப்பட்ட கால்வாய் மூலம் பலருக்கும் குடிநீர் வசதியையும் தர வேண்டிய நிலையில் உள்ளனர்.   தற்போது இந்த அணையின் நீர் மட்டம் அபாய எல்லையை இன்னும் 28 தினங்களில் எட்டி விடும் என அஞ்சப்பபடுகிறது.