சென்னை: நாடாளுமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், மதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான தேர்தல் அட்டவணையை மார்ச் மாதத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆளும் பாஜக அரசுக்கு எதிராக,  28 கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அமைத்து செயலாற்றி வருகிறது. இந்த கூட்டணியில்  மதிமுகவும் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியிலும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை குழு என பல குழுக்களை திமுக தலைமை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், மதிமுக தரப்பில் 4 பேர் கொண்ட பேச்சு வார்த்தை குழு அமைக்கப்பட்டு உளளது.  அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் 4 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.  அதன்படி, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவை அமைத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் 4 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. துணைப் பொதுச்செயலாளர் ராசேந்திரன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு  இரு இடமாவது  கேட்க வேண்டும என விரும்பும் வைகோ,  அதில் ஒன்றை  தனது மகன் துரை வையாபுரிக்கு ஒதுக்கி,  எம்பி.யாக்கி அழகு பார்க்கும் வகையில், திமுகவிடம் ரகசியமாக வைகோ பேசி வருவதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.