ஷோப்பூர்
மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளச் சேதங்களை பார்வையிடதாமதமாக மத்திய பாஜக அமைச்சர் வந்ததால் மக்கள் மிக்வும் கோபத்தில் உள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர்-சம்பல் பிராந்தியத்தின் எட்டு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். இங்குள்ள எட்டு மாவட்டங்களில் 1,250-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 9,000 மக்கள் மிக மோசமான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஷோப்பூரில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் வாகன அணிவகுப்பைத் தடுக்க முயன்ற பொதுமக்கள், அவருக்கு கருப்புக் கொடி காட்டி வாகனத்தின் மீது சேற்றை வீசி போராட்டம் நடத்தினர்.பாஜகவின் மத்திய அமைச்சர் தாமதமாக பாதிப்பை ஆய்வு செய்ய வந்ததாகக் கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர்.
அமைச்சர் தோமரை ஷோப்பூர் நகரத்தின் முக்கிய சந்தையில் உள்ளே நுழையவிடாமல் மக்கள் தள்ளிக் கொண்டு செல்ல முயன்றனர். மேலும் இது குறித்து, “ அரசின் தவறான நிர்வாகம் காரணமாக, அம்ரல் மற்றும் சீப் ஆற்றில் வெள்ள பாதிப்பு அதிகமானது. வெள்ளம் குறித்துச் சரியான நேரத்தில் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கவில்லை” என் று பொதுமக்கள் அமைச்சர் தோமரிடம் புகார் செய்தனர்.