தொழிலாளிக்கு மண்ணில் கிடைத்த ரூ. 35 லட்சம் வைரம்..
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள பந்தல்கண்ட், பன்னா உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான வைரச்சுரங்கங்கள் உள்ளன.
பூமியைத் தோண்டினால், அதிர்ஷ்டம் இருப்போருக்கு வைரக்கற்கள் கிடைக்கும்.
சிலதினங்களுக்கு முன்னர், பந்தல்கண்ட் பகுதியில் தொழிலாளி ஒருவர் பூமியைத் தோண்டிய போது விலை மதிப்பில்லாத வைரம் கிடைத்துள்ளது.
இதேபோல், பன்னா மாவட்டத்தில் சுவால் என்ற கூலித்தொழிலாளி அங்குள்ள குறிப்பிட்ட இடத்தில் மண்ணை தோண்டிய போது மூன்று வைரக்கற்களைக் கண்டெடுத்தார்.
அதனை பன்னா மாவட்ட வைர அலுவலகத்தில் அவர் ‘டெபாசிட்’ செய்துள்ளார்.
தொழிலாளி சுபால் கண்டெடுத்த வைரத்தின் மதிப்பு 35 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என வைர வியாபாரிகள் தெரிவித்தனர்.
அந்த வைரம் பொது ஏலத்தில் விடப்படும். ஏலத்தொகையில் கிடைக்கும் பணத்தில் 12 சதவீதம் அரசுக்கு வரியாக பிடித்தம் செய்யப்படும்.
எஞ்சிய 88 % ஏலப்பணம் தொழிலாளிக்குக் கிடைக்கும் என மாவட்ட வைர அலுவலர் ஆர்.கே.பாண்டே தெரிவித்துள்ளார்.
-பா.பாரதி.