மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான், மூன்று தினங்களுக்கு முன்னர் தான் , அமைச்சர்களை நியமித்தார்.நரோட்டம் மிஸ்ரா என்பவருக்கு சுகாதார இலாகா ஒதுக்கப்பட்டது.
அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு 100 பேர் உயிர் இழந்துள்ள நிலையில், அந்த நோயை கட்டுப்படுத்தும் பொறுப்பு மிஸ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆமாம் . அந்த மாநிலத்தில் கொரோனா அமைச்சரும் மிஸ்ரா தான்.
முதல் கோணலே முற்றும் கோணல் என்பது போல் மிஸ்ரா செயல்பாடுகள் இருந்ததாக ம.பி. மக்கள் தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.
என்ன விஷயம்?
அமைச்சர் பதவி ஏற்றபின் முதல் முறையாக அவர், தனது சொந்த ஊரான டாதியா சென்றிருந்தார்.
அமைச்சரின் வீட்டருகே அவரை, குடும்பத்தினர் திலகமிட்டு வரவேற்று, சுவீட் எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்
நண்பர்கள், கட்சி காரர்கள், உறவினர்கள் என திரளான கூட்டம்.
ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் மிஸ்ரா, அப்போது முகக்கவசம் அணிந்திருக்கவில்லை.
அவரை வரவேற்க வந்த யாருமே முகக்கவசமும் அணியவில்லை.
தனிநபர் இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை.
வீட்டில் இருந்து நேராக, தனது உள்ளூர் அலுவலகத்துக்கு (வழக்கம்போல்) முகக்கவசம் அணியாமல் சென்ற இந்த கொரோனா அமைச்சர்-
கொரோனாவை ஒழிப்பது குறித்து பாடம் நடத்தியது தான் காமெடியின் உச்சம்.