மதுரை :
திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் மனிதனுடைய மனநிலையை கெடுக்கின்றன என்று நீதிபதி கிருபாகரன் வேதனையுடன் தெரிவித்தார். அறுபது வயது மூதாட்டியை வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்தது.

குற்றம்சாட்டப்பட்ட இரு இளைஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன், “சமீப காலமாக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன.
இதைத் தடுக்க போதிய நடவடிக்கை இல்லை” என்று தெரிவித்த நீதிபதி கிருபாகரன், “திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் மனித மனத்தை கெடுக்கின்றன” என்று வருத்தம் தெரிவித்தார்.
மேலும், பெண்கள் பாதுகாப்பு குறித்து பதில்மனு தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
[youtube-feed feed=1]