அமெரிக்காவில் திரையரங்கில் சென்று படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சமீப ஆண்டுகளாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தேசிய சினிமா தினம் கடைப்பிடித்து வருகிறது.

இந்த வார இறுதியில் அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளில் 3 டாலருக்கு சினிமா டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனிலும் தேசிய சினிமா தினம் கடைபிடிக்க துவங்கி இருக்கும் நிலையில், இந்தியாவில் இந்த மாதம் 16 ம் தேதி தேசிய சினிமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஐநாக்ஸ், பிவிஆர், சினிபொலிஸ் உள்ளிட்ட மல்டி-ப்ளெக்ஸ் திரையரங்கங்கள் இந்த தேசிய சினிமா தினத்தில் கலந்து கொள்கின்றன.

அன்று ஒரு நாள் மட்டும் நாடு முழுவதும் சுமார் 4000 தியேட்டர்கள் தங்கள் திரையரங்கில் டிக்கெட்டுகள் விலையை ரூ. 75 க்கு விற்பனை செய்ய சம்மதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஆன்லைன் தளங்கள் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு டிக்கெட் விலையுடன் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.

திரையரங்குகளில் சென்று வரிசையில் காத்திருந்து டிக்கெட் புக் செய்பவர்களுக்கு மட்டும் ரூ. 75 க்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.