தமிழ்நாட்டு கோயில்களில் நடைபெறும் இசைக்கச்சேரிகளில் திரைப்பட பாடல்கள் பாட அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் திருவிழாக்களின் போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் கோயில் இசை கச்சேரிகள் நடத்தப்படும் போது பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், கோயிலுக்குள் பக்தி பாடல்கள் மட்டுமே பாட அனுமதி உண்டு என்று அறநிலையத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel