சென்னை: கொரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் விதிக்கப்பட்ட 21 ஊரடங்கை மையமாக வைத்து, திரைப்படம் ஒன்றை தயாரிக்கவுள்ளனர்.
படத்தின் பெயர் ’21 டேய்ஸ்’. அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில், ஊரடங்கு நாட்களில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதே இப்படத்தின் கதை.
எம்பிஆர் ஃபிலிம்ஸ் சார்பில் இப்படம் தயாரிக்கப்படுகிறது. விஜய் பாஸ்கர் ராஜ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.
ஆன்லைன் மூலமாக நடிகர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனவாம்!
படப்பிடிப்பை ஊரடங்கு காலத்திற்கு பின்னர், விரைந்து நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனராம். படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுவிட்டது.