கோவை: சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பும் மலைரயில் சேவை, கொரோனா பொமுடக்கத்தால், ரத்து செய்யப்பட் நிலையில், உதகை-குன்னூர் இடையே வரும் 10-ம் தேதி முதல் மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன. மாநில மற்றும் மாட்ட  வருவாயை கருத்தில்கொண்டு சுற்றுலாத்லங்கள்,  பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. ஊட்டி வர விரும்பும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வர அனுமதி வழங்ககப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவர்ந்த மலை ரயில் எப்போது இயக்கப்படும் என கேள்வி எழுந்தது. பலர் இது தொடர்பாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து,  தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வந்தன. தொடர்ந்து,  கடந்த சில நாட்களாக மலை ரயில் 2 பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், முதற்கட்டமாக நீலகிரி மாவட்டம் உதகை-குன்னூர் இடையே மலை ரயில் சேவை வரும் 10-ம் தேதி முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உதகை-குன்னூர் இடையே மலை ரயிலை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளரதைத் தொடர்ந்து,  வரும் 10-ம் தேதி முதல் உதகை குன்னூர் இடையே தினமும் நான்கு முறை மலை ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலை 7.45 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்படும் மலை ரயில் 9.05 மணிக்கு உதகையை வந்தடையும்.

காலை 9.15 மணிக்கு உதகையிலிருந்து புறப்பட்டு காலை 10.25 மணிக்கு குன்னூர் சென்றடையும்.

பகல் 12.35 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்படும் மலை ரயில் மதியம் 1.50 மணிக்கு உதகையை வந்து சேரும்.

பின்னர் மதியம் 2 மணிக்கு உதகையிலிருந்து புறப்பட்டு மதியம் 3.15 மணிக்கு குன்னூரை சென்றடையும்.

இதற்கான ஏற்பாடுகள் மற்றும் முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே சேலம் கோட்ட கூடுதல் கோட்ட மேலாளர் அ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.