மரங்களின் தாய்: 105 வயது இந்திய பெண்மணிக்கு பி.பி.சி. கவுரவம்!

Must read

 
trees-mother1
80 ஆண்டுகளில் 8000ம் ஆலமரம் நட்டு அதை தன் பிள்ளைகள் போல் வளர்த்து வருபவர் ‘சாலு மரத’ திம்மக்கா என்பவர். அவருக்கு வயது 105. இந்த வயதிலும் முதுமையை எண்ணி கலங்காமல் மரங்களையே தான் பெற்ற பிள்ளைகளாக போற்றி வருகிறார்.
கர்நாடக மாநிலம்,  பெங்களூர் அருகே உள்ள  கூதூர் கிராமத்தை சார்ந்தவர்தான் இந்த சாலுமரத திம்மக்கா என்ற பெண்மணி.
இந்த கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வழி வெறும்  பொட்டல் காடாக இருந்தது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் இளைபாற முடியாமல் வெயிலில் அவதிப்பட்டனர். இதை பார்த்த திம்மக்காவுக்கு யோசனை தோன்றியது.
சாலையின் இருபுறமும் மரங்கள் நட்டால், அந்த வழியாக செல்பவர்கள் மர நிழலில் தங்கி இளைப்பாறி செல்வார்கள், அதுபோல கால்நடைகளும்  இளைப்பாறுமே என்று யோசனை செய்தார். இதுகுறித்து தனது கணவருடன் விவாதித்தார். அவரும் ஓகே சொன்னதுடன், இந்த நல்ல முயற்சிக்கு தானும் துணை நிற்பதாக கூறினார்.
அதைத்தொடர்ந்து  கணவன் மனைவி இருவரும் சேர்நது சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் நட்டனர். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு மரங்கள் நட்டனர்.
அத்துடன் பணி முடிந்தது என்று இல்லாமல், அதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி, தனது பிள்ளைகளை போல கஷ்டப்பட்டு வளர்த்தனர்.
இன்று அந்த 4 கிலோ மீட்டர் பகுதியும் மரங்களால் பசுஞ்சோலையாக மாறி, பார்ப்பவர்களுக்கு கண்கொள்ள காட்சியாக இருக்கிறது.
அன்று நான்கு கிலோ மீட்டர் துரரம் அவர் நட்ட மரங்கள் இன்று,  அந்த ஊர் மக்கள்  அனைவருக்கும் நிழல் தருகிறது.
பொட்டல் காடாக காட்சி அளித்த அந்த சாலை, இப்போது சோலை வனமாக மாறிவிட்டது.
இதுபோல பல இடங்களில் இவர் மரங்கள் நட்டி உள்ளார். இதுவரை  மாநிலம் முழுவதும் 80 ஆண்டுகளில் 8000ம் ஆலமரங்களை  நட்டி பாதுகாத்து வந்துள்ளார்.
இதற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. இந்திய அரசும் அவரது சேவையை பாராட்டி  தேசிய குடிமகன் விருது வழங்க கவுரவித்து உள்ளது.
இதுவரை நான்கு குடியரசு தலைவர்களின்  கைகளில் இருந்து விருதுகள் பெற்றுள்ளார் திம்மக்கா. அதுபோல் மூன்று பிரதமர்களிடம் இருந்தும், பல முதல்வர்களிடம் விருதுகள் பெற்றுள்ளார். சுமார் 1000 க்கும் மேற்பட்ட விருதுகள், சான்றிதழ்கள் வாங்கி குவித்து உள்ளார்.
உலக அளவில் ஆண்டுதோறும் சிறந்த பெண்மணிகளை பிபிசி தேர்வு செய்வது கவுரவப்படுத்துவது வழக்கம்.
அதுபோல, 2016ம் ஆண்டிற்கான பிபிசியின் ‘உலகில் சிறந்த 100 பெண்மணி’களில் திம்மக்காவும் இடம் பெற்றுள்ளார்.
அவரது தேர்வு, இந்திய நாட்டிற்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனுக்கும்  பெருமை சேர்ப்பதாக உள்ளது.
சுற்றுப்புற சூழலை பேணி காக்க ஒரு  கிராமத்துப்பெண் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதற்கு திம்மக்காவே சான்று.
trees-mother
அவரது சாதனை, நமது தாய்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகன்களையும் பெருமை அடைய செய்கிறது…. திம்மக்காவை மென்மேலும் உடல்நலத்தோடு வாழ வேண்டும் என்றும் நாமும் மனசார வாழ்த்துவோம்….!

More articles

Latest article