பிரதமர் மோடி கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த பின்னர் ரிசர்வ் வங்கி செல்லாத நோட்டுக்களை மக்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு வருகிறது. அப்படி பெறும் நோட்டுக்கள் மட்டும் கிட்டத்தட்ட 2300 கோடி ரூபாய் நோட்டுத் தாள்கள் இருக்குமென்று எதிர்பார்க்கப்ப்டுகிறது.

notes9

அந்த நோட்டுக்களை அதற்கெனெ உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் சிதைத்து அவை இறுதியில் மண்ணுக்கு உரமாக நிலத்தில் புதைக்கப்படும். ஆனால் மலைபோல் குவியும் செல்லாத நோட்டுக்களை வைத்து மின்சாரம் தயாரிக்கும் உத்த்யை கடந்த 2014 முதல் சீனா கடைப்பிடித்து வருகிறது.
ஒரு டன் ரூபாய் சிதைக்கப்பட்ட நோட்டு குவியலில் இருந்து 660 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கலாமாம்! அதுமட்டுமன்றி நிலக்கரியை எரிக்கும்போது உண்டாகும் மாசுக்களை விட ரூபாய்நோட்டு தாள்களை எரிக்கும்போது உண்டாகும் மாசு மிகவும் குறைவு என்றும் தெரியவருகிறது. சீனாவில் ஹெனான் மாவட்டம் லுவோயாங் நகரத்தில் செல்லாத, சிதைக்கப்ட்ட ரூபாய் நோட்டிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இங்கு ரூபாய் நோட்டிலிருந்து மாத்திரம் 1.32 மில்லியன் கிலோவாட் மின்சாரம் ஆண்டுதோறும் தயாரிக்கப்படுகிறது. இது 4,000 டன் நிலக்கரியை எரித்து பெறப்படும் மின்சாரத்துக்கு இணையாகும்.
ஒரு லாரி அளவு சிதைக்கப்பட்ட ரூபாய் நோட்டிலிருந்து ஒரு குடும்பத்துக்கு 25 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரம் பெறலாமென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
இதில் இந்தியா சீன முறையை பின்பற்றினால் ரூபாய் நோட்டை தடை செய்தததில் மக்களுக்கு இந்த பயனாவது மிஞ்சும்!